பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டங்களில் வெடிபொருட்கள் பதுக்கல்: மூவர் கைது

பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல் பாளையத்தில் விவசாய தோட்டத்தில் பாதுகாப்பில்லாமல் அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்த 1308-ஜெலட்டின் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரை கைது செய்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல் பாளையத்தில் விவசாய தோட்டத்தில் பாதுகாப்பில்லாமல் அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்த 1308-ஜெலட்டின் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரை கைது செய்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல் பாளையம்- பழையூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் ஜெலட்டின் உள்ளிட்ட வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்செல்வநாகரத்தினத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் பொள்ளாச்சி காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் கோமங்கலம் போலீசார் பழையூர் பகுதியில் விஜய்பாபு என்பவரது தோட்டத்தில் சோதனையிட்டனர். அப்போது மோட்டார் அறையில் அட்டைப் பெட்டிகளில் ஜெலடின் வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து 1308-ஜெலட்டின் வெடிபொருட்களைப்பறிமுதல் செய்த போலீசார் கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, கனகராஜ், விஜய்பாபு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் வெடிபொருட்களை வைத்திருப்பதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கல்குவாரிகளுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...