கோவை மாநகராட்சியில் குப்பைகளை எடுக்கும் பணிகள் மோசமடைந்து கொண்டே வருகிறது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை மாநகராட்சியைப் பொறுத்த வரை குப்பைகளை எடுப்பது என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது. ஒரு மாத காலத்தில் அதனைச் செய்யவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்திற்குப் பிறகு அரசின் வழக்கமான செயல்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் காயர் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் சிறு-குறு காயர் தொழில் நிறுவனங்களில் ஆளும் கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் குறிப்பாக அமைச்சர்கள் பெயரைக் குறிப்பிட்டு வசூல் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கத் தயங்குகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். பணம் வசூலிப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஜனவரி முதல் கைத்தறி ரகங்களுக்கு 12% ஜி.எஸ்.டி அதிகரிப்பதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதற்கு விலக்களிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக மத்திய மாநில நிதி அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். தமிழக முதல்வரும் இந்த கோரிக்கையைத் தமிழக நிதி அமைச்சர் மூலம் வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டும். கோவை மாநகராட்சியைப் பொறுத்த வரை குப்பைகளை எடுப்பது என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் மக்கள் இந்த பிரச்சனையைத் தான் முன் வைக்கின்றனர். சாலைகளைக் கூடிய விரைவில்சரிசெய்வதாகக் கூறியுள்ளார்கள். ஒரு மாத காலத்தில் அதனைச் செய்யவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.

கேரளா பாஜக ஓபிசி செயலாளர் படுகொலை பற்றி பேசிய அவர் கேரளாவில் மத தீவிரவாதத்தை வளர்க்கக் கூடிய குழுக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க கூடிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் தற்போது படுகொலை நிகழ்ந்து வருகிறது.

இந்த படுகொலைகளை NIA விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இந்த கொலைகளை அந்நிய நாட்டில் திட்டமிட்டுச் செய்யப்படக் கூடிய படுகொலைகளாக நாங்கள் பார்க்கிறோம். எனவே மாநில அரசாங்கம் இதனை கண்டறிவரை விட்டுவிட்டு NIA விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...