மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்

மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் தொழில் முனைவோர் வரும் 20-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றன. இதில் தமிழகத்தில் 100-சதவீதம் சிறு-குறு தொழில்கள் முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாகக் கோவையில் அனைத்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.



கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, கோவையில் நடத்தப்படும் போராட்டம் குறித்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள்  செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கூட்டமைப்பின் நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில்,

வரும் 20-ம் தேதி போராட்டத்தில் கோவையில் உள்ள CRI, TEXMO, PRICOL உட்பட அனைத்து நிறுவனங்களும் முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாகவும், தமிழகத்தில் 100 சதவீதம் சிறு-குறு தொழில்கள்  முழு அடைப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் 250-அமைப்புகள் இந்த முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாகவும் இந்த மூலப்பொருட்கள் விலை 30-முதல் 200-சதவீதம் வரை உயர்ந்து இருக்கின்றது. அதேபோல் பம்ப்செட் தொழில் கடும் மந்த நிலையை அடைந்து இருக்கின்றது. தொழில் முனைவோருக்கு  உற்பத்தி செலவு 40-சதவீதம் அதிகரித்துள்ளது.

எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்  மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



வெங்காயம் போன்ற பொருட்கள் விலையேறிய போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது போல் தொழில் முனைவோருக்குத் தேவையான இரும்பு மற்றும் பல்வேறு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியாவில் மனித வளம் அதிகமுள்ள நிலையில் உள்நாட்டு தேவைக்கு ஏற்றார் போல் ஏற்றுமதியைக் குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்த கொரோனா மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றக் காரணத்தால் கடந்த மூன்று வருடங்களில் ஒரு நிறுவனம் 6-மாதம் மட்டுமே செயல்பட்டுள்ளது அதேசமயம் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளோம் எனக்குறிப்பிட்டவர்கள் மூலப்பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்திய அளவில் இந்த ஒரு நாள்  முழு அடைப்பு போராட்டத்தால் 25000-கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்றும்  கோவையைப் பொறுத்தமட்டில் அன்று 1500-கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...