குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இரு கரடிகளால் மக்கள் அச்சம்

அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சின்ன உபதலை பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் உணவிற்காக புகுந்த கரடிகளால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் சின்ன உபதலைப் பகுதியைச் சுற்றிலும் உள்ள வனப் பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில், சின்ன உபதலைப் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு வந்த இரண்டு கரடிகள் அங்கேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்தன. சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்த போது வீட்டின் அருகி் இருந்து ஒரு கரடி ஓடியதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக கதவை மூடி தப்பித்தார்.

பின்னர், எதிரில் மற்றொரு கரடியும் இதனுடன் சேர்ந்துக் கொண்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி வந்தன. இதன் காரணமாக, குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.

அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன் கரடிகளை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...