கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகை திருட்டு..!

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருடுபோன வைர நகை பற்றி வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காளப்பட்டி பகுதியிலுள்ள சுபகனேஷ் கார்டனில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது மனைவியுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து, தன் மனைவி அணிந்திருந்த மூன்றரை பவுன் உள்ள வைரம் பதித்த தங்க நகையை கழட்டி வீட்டிலிருந்த மேஜை டிராயரில் வைத்துள்ளார். 

இந்த நிலையில், டிராயறை திறந்து பார்த்து போது நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இது குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், திருடுபோன வைர நகை பற்றி வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...