கோவையில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக புகார்..!! லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

அதிகாரிகள் விசாரணையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்து அதற்கான பணத்தை கட்டவில்லை எனவும் இருப்பில் இந்த பொருட்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது.


கோவை: கோவையில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கோவை பச்சாம்பாளையத்தில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகம் ஆர்.எஸ். புரம் லாரி ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவின் தயாரிப்புகளான நெய் இனிப்பு வகைகள் ஆகியவை விற்பனை செய்வதில் 60 லட்சம் வரையும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

குறிப்பாக கோவை ஆவின் நிறுவனத்தின் ஊழல் முறைகேடு, விற்பனை சரிவு குறித்து ஊழியர்கள் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் ஆவின் ஆணையருக்கு தெரிவித்தனர். மேலும், விற்பனை பிரிவு மேலாளர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆவின் ஆணையர் டாக்டர் சுப்பையா உத்தரவின் பெயரில் சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட ஆவின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று கோவை ஆர்.எஸ். புரம் லாலி ரோட்டில் உள்ள மார்க்கெட்டிங் அலுவலகத்துக்குச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்த ஆவணங்கள் இருப்பில் உள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். மேலும் பச்சாம்பாளையம் நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர்.

காலை முதல் இரவு வரை ஆர்.எஸ். புரம் மற்றும் பச்சாம்பாளையம் ஆவின் முறைகேடு நடந்துள்ளதா என்பது தொடர்பான விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா விற்பனை அலுவலர் சுப்பிரமணியம், ஜீவிதா, சாமிநாதன் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.

அதிகாரிகள் விசாரணையில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்து அதற்கான பணத்தை கட்டவில்லை எனவும் இருப்பில் இந்த பொருட்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...