கோவையில் நடைபெற்ற போலீசாருக்கான குறை தீர்ப்பு முகாமில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு..!!

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல்துறையின் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தி குறைகள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் நடைபெற்ற போலீசாருக்கான குறை தீர்ப்பு முகாமில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், கோவை வந்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு இன்றி குறைதீர்க்கும் முகாமுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில் போலீசார் தங்கள் குறைகள் சம்பந்தமான மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாநகர காவல்துறை ஆணையர் பிரதீப் குமார், டிஐஜி முத்துசாமி, கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.



இந்த முகாமில் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஏடிஎஸ்பி முதல் போலீசார் வரை 853 பேர் மனு அளித்தனர்.



இது குறித்து கோவை மாநகர போலீஸ் கூறியதாவது:-

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல்துறையின் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தி குறைகள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 காவல் ஆணையர் அலுவலகங்களில், காவல் துணை ஆணையர்களால் 5,236 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப் பட்டுள்ளன. அவர்களால் தீர்க்கப்படாத மனுக்கள் 11 சரக காவல் துணை தலைவர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. சரக காவல்துறை துணைத் தலைவர்களால் தீர்க்கப்படாத மனுக்கள் மண்டல காவல்துறை தலைவர்களால் தீர்வு எட்டப்பட்டன.

கடந்த 3ம் தேதி வடக்கு மண்டல காவலர்களின் குறைகளை காவல்துறை தலைமை இயக்குனர் கேட்டறிந்து 300 மனுக்கள் பெறப்பட்டும், 8ம் தேதி சென்னை மாநகர காவலர்களின் குறைகளை காவல்துறை தலைமை இயக்குநர் கேட்டறிந்து 748 மனுக்கள் பெறப்பட்டும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 16ம் தேதி மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகர காவலர்களின் குறைகளை காவல்துறை தலைமை இயக்குநர் கேட்டறிந்து, 600 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் 16ம் தேதி மதியம் காவல்துறை தலைமை இயக்குநர் தெற்கு மண்டலத்திற்கு நேரில் சென்று காவலர்களின் குறைகளை கேட்டறிந்து 916 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காவல்துறை தலைமை இயக்குநர் மேற்கு மண்டலம், கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் மற்றும் சேலம் மாநகர காவலர்களின் குறைகளை கேட்டறிந்து 843 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக 1,340 மனுக்கள் கடந்த ஜூலை முதல் நவம்பர் 2021 வரை காவலர்கள் மற்றும் அலுவலர்களிடம் பெறப்பட்டன. இதில் 1,058 கருணை மனுக்கள், அவற்றில் 366 மனுக்கள் மீது தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 51 பேர் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்டிருக்கிறார்கள். 164 பேரின் தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறை தலைமை இயக்குநர் மனுக்களை பரிசீலனை செய்து 1353 காவலர்களுக்கு அவர்களின் விருப்பப்படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர் மூலம் தீர்வு காணப்படாத காவலர்களுடைய புகார் மனுக்கள் தமிழக முதல்வரிடம் காவலர்களால் நேரில் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...