கோவையில் குற்றங்களை தடுப்பதற்காக சந்தேகப்படக் கூடிய நபர்களை புகைப்படம் எடுத்து விசாரிக்கும் போலீசார்..!

மேலும், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிறப்பு தணிக்கை பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் குற்றங்களை தடுப்பதற்காக சந்தேகப்படக் கூடிய நபர்களை புகைப்படம் எடுத்து விசாரணையை போலீசார் துவக்கியுள்ளனர்.

கோவை மாநகரில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை பிடித்து கைது செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை மையப்படுத்தி அங்கு சிறப்பு வாகன தணிக்கை செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் சிறப்பு தணிக்கை பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது:-

மாநகரில் 50 இடங்களில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் காலை, மதியம், மாலை, இரவு, நேரங்களில் காவல் துறையினர் சிறப்பு தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள சந்தேகத்திற்குரிய நபர்கள் முகத்தை தனது செல்போனில் பதிவு செய்து ஃபேஸ் ரெக கனேஷன் என்ற பிரத்யேக செயலி மூலமாக ஒப்பீட்டு விசாரிப்பார்.

மேலும், ஏறத்தாழ 250 காவலர்கள் இப்பணிகளில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...