கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் கைதி வரைந்த ஓவியத்திற்கு தேசிய அளவில் பரிசு..!

தொழிற்கூட பிரிவில் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரம் தவிர, ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைய பயிற்சி பெற்றுள்ளார்.


கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி வரைந்த ஓவியம் தேசிய அளவிலான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை தினத்தை அனுசரிக்கும் பொருட்டு, 'டிங்கா டிங்கா இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சிறைத்துறை ஊழியர்கள், கைதிகளுக்கு போட்டி நடத்தி பரிசு வழங்குகிறது.

இந்தாண்டு, ஓவியம், சிறப்பு நிபுணத்துவம் மற்றும் சிறை நிர்வாகம் என்ற தலைப்புகளில் இணைய வழியில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை சிறை கைதி பிரபு (42) ஓவியப் போட்டியில் பங்கேற்றார்.

'சிறைகளில் டெலிபோன்' என்ற தலைப்பில் நடந்த ஓவியப்போட்டியில் பங்கேற்ற அவர், தேசிய அளவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். ஆயுள் தண்டனை கைதியான பிரபு, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐந்து ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

தொழிற்கூட பிரிவில் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரம் தவிர, ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைய பயிற்சி பெற்றுள்ளார். பிரபுவை, சிறைத்துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம், கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...