தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி பற்றி தகவல் அளித்தால் ரூ.6 லட்சம் பரிசு அறிவிப்பு.!

கேரளா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தை, 044 - 22502450 என்ற தொலைபேசி எண் மற்றும் 94965 33777; 94937 99358; 94977 15294 என்ற மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.


கோவை: ராமலிங்கம் கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால், 6 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருப்புவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பாத்திரக் கடை நடத்தி வந்தார். அப்பகுதியில் நடந்த மதமாற்றத்தை தட்டிக் கேட்டதால், பிப்ரவரி, 5ல், கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-

ராமலிங்கம் கொலை வழக்கில், திருப்புவனம் ரெஹ்மான் சாதிக் (39), முகமது அலி ஜின்னா (34) மற்றும் கும்பகோணம், மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (37) ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள, வஞ்சுவளியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (28), திருவிடைமருதூர் அடுத்துள்ள, திருமங்கலக்குடி சாஹூல் ஹமீத் (27), நபீல் ஹாசன் (28) ஆகியோரும் தேடப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால், ரகசியம் காக்கப்பட்டு, நபர் ஒன்றுக்கு, 1 லட்சம் ரூபாய் வீதம், ஆறு பேருக்கும், 6 லட்சம் ரூபாய் தரப்படும்.



கேரளா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தை, 044 - 22502450 என்ற தொலைபேசி எண் மற்றும் 94965 33777; 94937 99358; 94977 15294 என்ற, மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...