கோவை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு..!

நிலுவையில் உள்ள வழக்குகள் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்யவும், குற்றச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.


கோவை: கோவை கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குச் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் ஈரோடு சென்றார்.

ஈரோடு செல்லும் போது திடீரென காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கோவையில் தடகள போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு நேற்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

வழியில் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், டிஜிபியை வரவேற்றனர்.

பின்னர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யவும் குற்றச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், மனு கொடுக்கக் கூடிய மக்களிடம் கனிவோடு அன்போடு நடக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா டெங்கு பாதிப்புகளில் இருந்து மக்களை காத்துக்கொள்ள விழிப்புணர்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...