கோவை உக்கடம் புல்லுக்காடு கலைக்கூடத்தில் சுவரோவியங்கள்‌ நிறைவு விழா பணியினை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்..!

மேலும், கோவை மாநகராட்சி உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ சிறப்பு துப்புரவு பணியை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ சீர்மிகு நகரம்‌ திட்டத்தின்கீழ்‌ உக்கடம்‌ கலைக்கூடம்‌, ஸ்ட்ரீட்‌ ஆட்‌ ஆப்‌ இண்டியா பவுண்டேசன்‌ சார்பில்‌ சுவரோவியங்கள்‌ நிறைவு விழா பணியினை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டு துவங்கி வைத்தார்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2020ம் ஆண்டு ஸ்ட்ரீட் ஆர்ட் ஆஃப் இந்தியா பவுண்டேசன் உக்கடம் கலைக் கூடத்தைத் தொடங்கியது. இந்த திறந்தவெளி கலைக்கூடம் தேசிய மற்றும் சர்வதேச சுவைஞர்களின் 5 சுவரோவியங்களுடன் தொடங்கியது.



இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் 5 கூடுதல் சுவரோவியங்கள் வரைய ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.



இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே கலைக்கூடத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில், இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு துவங்கி வைத்தார்.



பின்னர், கோவை மாநகராட்சி உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ சிறப்பு துப்புரவு பணியை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி அவர்கள்‌ தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப, துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, முன்னாள்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஏ.பி.நாகராஜன்‌ மற்றும்‌ அரசு துறை அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...