திருப்பூர் ரயில் நிலையம் அருகே குமரன் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்: திருப்பூரில் திமுக அரசை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று திருப்பூரில் ரயில் நிலையம் அருகே குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும், சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனிடையே, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.