நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த எனக்கு சொந்த கிராம குளத்தில் தண்ணீர் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது - மயில்சாமி அண்ணாதுரை

ஊர் கூடி தேர் இழுத்தது போல், அனைவரும் சேர்ந்து பணியாற்றி கோதவாடி குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.


கோவை: நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த எனக்கு, சொந்த கிராமத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது என கோதவாடி குளத்தை பார்வையிட வந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் உள்ள 152 ஏக்கர் பரப்பளவுள்ள குளம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்ட உபரி நீரால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் தருவாயில் உள்ளது

இந்த நிலையில், சொந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் தருவாயில் உள்ள குளத்தை நேற்று மாலை இஸ்ரேல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இந்த குளம் நிரப்புவதற்கு பாடுபட்ட தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகளை பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா திட்டம் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலிருந்து இந்தியர்கள் விண்வெளிக்குப் போவதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கிறது என்றார்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 மில்லியன் கிலோ மீட்டரில் இஸ்ரோ செயற்கைக்கோள் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் சூரியனை பார்க்கும்படி செய்து, சூரியனின் தகவல்களை ஆராய்வுக்கான பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், நிலவுக்கு மனிதர்கள் அனுப்புவதற்கான சூழ்நிலை இருந்தால் அதற்கான பணிகளில் இஸ்ரோ ஈடுபடும் என்றும், விண்வெளிக்கு அனுப்பும் மனிதர்கள் பாதுகாப்பு குறித்தும், ஆளில்லா விண்கலம் நிலவுக்கு அனுப்பும் பாதுகாப்பு குறித்தும் ஆராய்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

மேலும், நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த எனக்கு, சொந்த ஊரில் உள்ள குளத்தில் தண்ணீர் இல்லையே என்ற ஏக்கம் இருந்த நிலையில், ஊர் கூடி தேர் இழுத்தது போல், அனைவரும் சேர்ந்து பணியாற்றி கோதவாடி குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...