பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக - கேரளா எல்லையில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு..!

கிணத்துக்கடவு கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கேரளாவில் பறவைக்காய்ச்சல் அதிகரிப்பு எதிரொலியால் கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரளா எல்லையில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் அண்மைக்காலமாக பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது.

அதன்படி, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவக் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் கோழி, கோழித் தீவனம், முட்டை போன்ற பறவைகள் சம்பந்தமாக வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.

மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கிருமி நாசினி தெளித்து பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

கிணத்துக்கடவு கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...