கோவையில் இரண்டு பெண்களை காரில் கடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை

கோவையில் சரவணம்பட்டி வெற்றி விநாயகர் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து இரண்டு பெண்களை காரில் கடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து இரண்டு பெண்களை காரில் கடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி வெற்றி விநாயகர் நகரில் அதிதி இன் சர்வீஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியூரைச் சேர்ந்த ராஜா, சிவகுமார் மற்றும் இரண்டு பெண்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். ராஜ்குமார் ஒரு அறையிலும் இரண்டு பெண்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளர் ஹரிஹரன் என்பவரிடம் சிவகுமார் எந்த அறையில் தங்கியுள்ளார் என கேட்டுள்ளனர்.

உடனே ஹரிஹரன் சிவகுமாரை செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது நான் யாரையும் வர சொல்லவில்லை என தெரிவித்துள்ளார். உடனே ஹரிஹரன் அவர்களை அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஹரிஹரனை அரிவாளால் தாக்கி விட்டு மிரட்டல் விடுத்தது.

இதனால் பயந்துபோன ஹரிஹரன் சிவகுமார் அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த கும்பல் மற்றொரு அறையில் தங்கியிருந்த பெண்கள் அறைக்குச் சென்று ரூபாய் 21- ஆயிரம், லேப்டாப் 2, செல்போன்கள், சிசிடிவி பாக்ஸ், ஆவணங்கள், கிரிடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்து அங்கிருந்து இரண்டு பெண்களையும் காரில் கடத்தி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாருக்கும் அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு அறையில் தங்கியிருந்த கடத்தப்பட்ட பெண்கள் யார்? இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...