நிரம்பி வரும் கோதவாடி குளத்தை இஸ்ரோ விஞ்ஞானி பார்வையிட்டு மகிழ்ச்சி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நிரம்பி வரும் கோதவாடி குளத்தை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்வையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.


கோவை: நிரம்பி வரும் கோதவாடி குளத்தை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்வையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் 152-ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.

30-ஆண்டுகளுக்குப் பிறகு கவுசிகா நதி அமைப்பு, கோதவாடிப் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் குளத்தைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது.

தற்போது இந்த குளத்திற்கு செட்டிக்காபாளையம், வடசித்தூர் பிஏபி கால்வாயிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதாவாடி குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது.



இந்த நிலையில் தனது சொந்த ஊரான கோதவாடி பகுதியில் 30-ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் தேங்கி நிற்பதைக் காண இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று நேரில் வந்து குளத்தைப் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.



கோதவாடி குளத்தைப் பார்வையிட வந்த மயில்சாமி அண்ணாதுரை கௌசிகா நதி நீர் பாதுகாப்பு அமைப்பினர், கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் விவசாயிகள் என அனைவரும் வரவேற்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...