பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ஆலந்துறை அருகே வளையன் குட்டை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் 59 மகேந்திரன் 29, ஆகியோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி கிருஷ்ணனுக்கும் மகேந்திரனும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன், கிருஷ்ணனை அடித்து உதைத்துள்ளார். படுகாயமடைந்த கிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நண்பன் மகேந்திரனைக் கைது செய்தனர்.