திருப்பூர் தனியார் பள்ளியில், 5-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல்..!

விசாரணை குறித்து காவல்துறையினர், பெற்றோர்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில், 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் - பூலுவப்பட்டி சாலை, கே.ஜி.புதூரில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 5 வயது பெண் குழந்தைக்கு கடந்த 14 ஆம் தேதி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக, நேற்று காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரினை தொடர்ந்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் பள்ளியில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில், இன்று மாலை வரை என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை தரப்பிலிருந்து குழந்தையின் பெற்றோர்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, குழந்தையின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பள்ளியின் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளியை கைது செய்ய தாமதபடுத்துவதாகவும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பள்ளியின் அனைத்து சிசிடிவிகளையும் ஆய்வு செய்துவிட்டதாகவும், அப்படி ஒரு சம்பவம் பள்ளியில் நடைபெறவில்லை என்றும், சிசிடிவி காட்சி பதிவுகளை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலியல் புகார் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...