திருப்பூரில் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவ-மாணவிகள்: தண்டிக்கப்படுவாரா தலைமை ஆசிரியர்?

திருப்பூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும் மாணவ-மாணவிகள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் தலைமையாசிரியர் கழிவறைகளைச் சுத்தம் செய்யச் சொல்வதாகும், ஜாதி பெயரைச் சொல்லித் திட்டுவதாகவும் மாணவ-மாணவிகள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் இடுவாய் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் 14-ஆசிரியர்களில் 12-பேர் நிரந்தர ஆசிரியராகவும், இரண்டு பேர் பகுதி நேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் கீதா என்பவர் கடந்த மூன்று வருடங்களாகத் தலைமையாசிரியராக இருந்து வருகிறார்.

தற்போது பள்ளியானது வாரத்திற்கு ஆறு நாட்கள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தலைமையாசிரியர் கீதா மாணவ-மாணவிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாகவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளை ஏளனமாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்க்கு சென்றுள்ளது. அது குறித்து விசாரணை செய்ய இன்று அவர் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளார்.



மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மாணவ-மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் கீதா மாணவ மாணவிகளைக் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்வதாகவும் மேலும் ஜாதியின் பெயரைச் சொல்லி கொச்சையான வார்த்தைகளைக் கொண்டு திட்டுவதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கண்ணீர் மல்கப் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்ட போது, காலையில் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அறிக்கை தயார் ஆனதும் நடவடிக்கை குறித்துத் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...