தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசே கொள்முதல் செய்ய வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

தக்காளி விலை உயர்வால் எந்த ஒரு விவசாயியும் பயனடையவில்லை, தக்காளி விலையை இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தவும், எப்போதும் சீரான விலையில் கிடைக்கவும், தமிழக அரசே தக்காளிகளைக் கொள்முதல் செய்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தக்காளி விலையை இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தவும், எப்போதும் சீரான விலையில் கிடைக்கவும் தமிழக அரசே தக்காளிகளைக் கொள்முதல் செய்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழையால் வரத்து குறைந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தக்காளி விலை உச்சத்தைத் தொட்டது. தமிழகத்தில் ரூ.140 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை குறையத் துவங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் காய்கறி கடைகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு மூலம் கூட்டுறவுத்துறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ ரூ.53 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே தக்காளிகளைத் தமிழக அரசே கொள்முதல் செய்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பெய்த மழை காரணமாகவே தக்காளி விலை உயர்ந்தது. இதற்கு முந்தைய காலங்களிலும் மழை பெய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பெய்தால் மற்ற மாநிலங்களில் பெரிதாகப் பெய்யாது.

அல்லது மற்ற மாநிலங்களில் பெரிதாகப் பெய்தால் தமிழகத்தில் பெய்யாது. ஆனால் இந்த ஆண்டு நாடு முழுவதும் தொடர் மழை. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து விலை உயர்ந்தது. இனி வரும் காலங்களில் இது போன்ற சூழ்நிலையில் மட்டுமல்லாது எப்போதுமே தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளை அரசே விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வியாபாரிகள் மற்றும் மக்களிடம் வழங்க வேண்டும்.

அப்போது தான் தக்காளி விலை உயர்வு எப்போதுமே கட்டுக்குள் இருக்கும். தற்போது உள்ள தக்காளி விலை உயர்வால் எந்த ஒரு விவசாயியும் பயனடையவில்லை. இடைத்தரகர்கள், மூன்றாவது நபர்கள் மட்டுமே பயன் அடைந்துள்ளார்கள். தக்காளியை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் டி.கே மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை குறையத் துவங்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டி.கே.மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘ கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு இன்றைய நிலவரப்படி 6000 பெட்டிகள் தக்காளி அதாவது சுமார் 150 டன் தக்காளிகள் கர்நாடக, ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்துள்ளன. சுமார் ரூ.3 ஆயிரம் வரை விற்ற பெட்டி ஒன்றின் விலை தற்போது ரூ.1000 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரிக்கத்தான் செய்யும்,’’ என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...