கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளதாக, கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு- பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளதாக, கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை-கிணத்துக்கடவு பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை-பொள்ளாச்சி- கிணத்துக்கடவு வழியாக இயக்கப்பட்டு வந்த பல்வேறு ரயில்களை மீண்டும் இயக்க கோரி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையம் பாலக்காடு கோட்டத்துடன் உள்ளதால் தமிழகப் பகுதியில் இயக்கக்கூடிய ரயில்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் கிணத்துக்கடவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவையிலிருந்து இயக்கப்பட்டு வந்த திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும், கூடுதலாகப் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும், மேலும் பொள்ளாச்சி- கிணத்துக்கடவு ரயில் நிலையம் பாலக்காடு கோட்டத்துடன் இருப்பதால் தமிழகத்துக்கு வரவேண்டிய பல திட்டங்கள் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையத்தைச் சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தைச் சேலம் கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி கிணத்துக்கடவு தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படுவதாக கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ரயில் பயணிகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்பித்தன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவராஜ், நகர தலைவர் செந்தில்குமார், பாஜக மாவட்ட நிர்வாகி துரை, கம்யூனிஸ்ட் கட்சி மருதாசலம், கிணத்துக்கடவு வியாபாரி சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் ரகுராஜ், பொருளாளர் சுப்பிரமணி, திமுக மகளிரணி கீதாகலைவாணி, லட்சுமணன் மற்றும் தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கங்களின் நிர்வாகிகள்,ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...