கோவை உக்கடம் - ஆத்துபாலம் இடையே கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மேம்பாலம் பணிகள் இன்னும் ஒரு ஆண்டுக் காலத்திற்குள் முடியும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் இடையே கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மேம்பாலம் பணிகள் இன்னும் ஒரு ஆண்டுக் காலத்திற்குள் முடியும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், வளையார் வழியாகக் கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாகக் கடந்த 2018-ம் ஆண்டு உக்கடம்-ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி ஏப்ரல் மாதம் துவங்கியது.
முதல் கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பாலப் பணிகளுக்கு ரூ.216- கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 55-தூண்கள் அமைக்கப்பட்டு ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதனிடையே கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரை இரண்டாம் மேம்பாலப் பணிகளுக்காகத் தமிழக அரசு ரூ.265-கோடி நிதி ஒதுக்கியது. இந்த இரண்டாம் கட்ட மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு ஆண்டிற்குள் முடிக்க ஒப்பந்ததாரரிடம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் மூன்று இடங்களில் இயங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன. போத்தனூர் பிரிவு, ஆத்துபாலம், உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இயங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன.
பொள்ளாச்சியிலிருந்து வரும் வாகனங்கள் போத்தனூர் பிரிவு இயங்குதளத்தைப் பயன்படுத்தி டவுன்ஹால் செல்லலாம், உக்கடம் பேருந்து நிலையம் இயங்குதளம் மூலம் சுங்கம் பைபாஸ் செல்லலாம், ஆத்துபாலம் இறங்குதளம் மூலம் பாலக்காடு சாலை செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும், வாகன ஓட்டிகளும் பயன் அடைவார்கள்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்கடம் -ஆத்துப்பாலம் மேம்பாலம் முதல் கட்ட பணிகள் 99 சதவீதம் முடிந்துள்ளது. உக்கடம் பேருந்து நிலையம் அருகே இறங்கு தளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளை இன்னும் ஒரு ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலப் பணிகள் முழுமையாக இன்னும் ஒரு அண்டிற்குள் முடிக்கப்படும்,’’ என்றார்.