பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் - பெற்றோர் உட்பட 3 பேர் கைது..!

சிறுமியின் அப்பா, வாலிபரின் அப்பா, வாலிபர் என மூவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டம் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்த பெற்றோர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வீராகுமார் (20). இவருக்கு கோவையைச் சேர்ந்த தனது உறவினரின் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கோமங்கலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், 16 வயது சிறுமிக்கு திருமண நடைபெறுவதாக சைல்டு லைனுக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்த நிலையில், திருமணம் நடைபெற இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்ற சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தை திருமணம் நடைபெற்றதை அடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, சிறுமியின் அப்பா, வாலிபரின் அப்பா, வாலிபர் என மூவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டம் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்த மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...