கோவையில் 18 வார்டுகள் கொண்ட மதுக்கரை பேரூராட்சியை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு..!

நகராட்சி அந்தஸ்து பெற்ற மதுக்கரை வட்டாரத்தில் பாதாள சாக்கடை திட்டம், மின்மயானம், பூங்கா உள்ளிட்ட பணிகள் நடத்த பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 18 வார்டுகள் கொண்ட மதுக்கரை பேரூராட்சியை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேரூராட்சி அந்தஸ்தில் இருந்து நகராட்சியாக மாற்றப்பட்டு நேற்று நகராட்சி நிர்வாகத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, பேரூராட்சியில் நடந்த திட்டப்பணிகள் பெறப்பட்ட வரியினங்கள், பொதுமக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் நகராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செயல் அலுவலர் பத்மலதா கூடுதல் பொறுப்பாக மதுக்கரை பேரூராட்சியை கவனித்து வந்தார். குடிநீர் வினியோகம், சாலை சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை கொரோனா கால சூழலிலும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொற்றுநோய் தடுப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, பொது இடங்கள் பராமரிப்பு பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. நகராட்சி அந்தஸ்து பெற்ற மதுக்கரை வட்டாரத்தில் பாதாள சாக்கடை திட்டம், மின் மயானம், பூங்கா உள்ளிட்ட பணிகள் நடத்த பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...