நகராட்சியாக மாற்றப்பட்ட கருமத்தம்பட்டிக்கு இன்று ஆணையர் பொறுப்பேற்பு..!

கருமத்தம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த கலையரசி இருகூர் பேரூராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் கருமத்தம்பட்டி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டு உள்ள நிலையில், நகராட்சி ஆணையர் இன்று பொறுப்பேற்கிறார்.

கருமத்தம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதிக வரி வருமானம் மக்கள் தொகையின் அடிப்படையில் கருமத்தம்பட்டி பேரூராட்சி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, அருகிலுள்ள ஊராட்சிகளை இணைப்பதில் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கணியூர் ஊராட்சி, கிட்டாம்பாளையம் ஊராட்சி, கரவளி, மாதப்பூர் ஊராட்சி, செம்மாண்டம் பாளையம் ஊராட்சி ஆகிய 4 ஊராட்சிகளை நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து எந்த ஒரு ஊராட்சியையும் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் இணைக்காமல் தனியே ஒரு ஊராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள நகராட்சியின் கீழ் பொறுப்பு ஒப்படைக்கப்படும். புதிய நகராட்சி ஆணையர் இன்று பொறுப்பேற்கிறார்.

இந்த நிலையில், இன்று முதல் கருமத்தம்பட்டி பேரூராட்சி நகராட்சியாக செயல்படும். கருமத்தம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த கலையரசி இருகூர் பேரூராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் இன்று புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்ற பிறகு நகராட்சி நிர்வாகத்திற்கு உண்டான பல்வேறு துறைகள் ஒதுக்கப்படும். அவர்களுக்கு உண்டான அதிகாரிகள் விரைவில் பொறுப்பு ஏற்பார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...