திருப்பூரில் 2வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..! வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது நாள் போராட்டத்தின் காரணமாக திருப்பூரில் 1,500 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேலும், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது நாள் போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 1,500 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...