மூலப்பொருட்கள் விலை உயர்வால் 95-சதவீதம் சிறு-குறு நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் இன்றி தவிப்பு..!

மூலப்பொருட்கள் விலை உயர்வால் 95-சதவீதம் சிறு-குறு நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் இன்றி தவித்து வருவதால், 20-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வால் 95-சதவீதம் சிறு-குறு நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் இன்றி தவித்து வருவதால், 20-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வேலாண்டிபாளையத்தில் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரதாப்சேகர், பொருளாளர் லீலாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.

பின்னர் ஜேம்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-



தொழில்துறைக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக 100-சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டு உள்ளது. தொழில் துறையினர் கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரத் துவங்கியதும் கடுமையான மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டு உற்பத்தி சார்ந்த தொழில் துறையினர் 70-சதவீதத்திற்கும் கீழ் தங்கள் உற்பத்தியைக் குறைந்து கொண்டனர்.

உற்பத்தித் துறை சார்ந்து ஜாப் ஆடர்கள், உதிரிப்பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் தொழில் கூடங்கள் 95 சதவீதத்திற்கும் மேல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஆடர்கள் இழந்து செய்வது அறியாமல் தவித்து வருகின்றார்கள். இந்த குறுந்தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன், தனியார் கடன், இட வாடகை, தொழிலாளிகளின் சம்பளம் என எதுவும் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு தொழில் இழக்கும் நிலையில் உள்ளனர்.

நாட்டில் கிட்டதட்ட 40-கோடி பேர்களுக்கு மேல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் இந்த தொழில்களைப் பாதுகாக்கவும், மூலப்பொருள்களின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்தவும், விலை நிர்ணய கமிட்டிஅமைக்கவும் கோரி வரும் 20-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் தொழில் கூடங்கள் கதவடைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

டாக்ட் சங்கமும் பங்கு எடுக்க உள்ளது. குறுந்தொழில்கள் நடத்தி வரும் அனைத்து தொழில் கூடங்களும் அன்றைய தினம் காலை 10-மணிக்குக் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் தொழில் அமைப்புகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு எடுப்பது என முடிவு

செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...