வேன், பேருந்து போன்றவைகளில் ஒரே நேரத்தில் அதிமுகவினர் வரதொடங்கியதால் நகரின் மையப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் சார்பில் குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று திருப்பூரிலும் ரயில் நிலையம் அருகே குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும், சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அதிமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வேன், பேருந்து போன்றவைகளில் ஒரே நேரத்தில் அதிமுகவினர் வரதொடங்கியதால் நகரின் மையப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.