அரசு பொதுமருத்துவமனை குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி புத்தாண்டை கொண்டாடிய ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும மாணவர்கள்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகத்திலும், அரசு பொது மருத்துவமனையிலும் நடத்தியது.



கோவைபுதூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி புத்தாண்டு நிகழ்ச்சியினை வெறும் சிறப்பு சொற்பொழிவு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மட்டும் இல்லாமல், வருகின்ற வருடத்தில் மாணவர்களின் தொழில், வேலை வாய்ப்பு, வாழ்க்கை திறன்களை பாடத்திட்டத்துடன் வகுப்பு நேரங்களில் செயல்படுத்த இதன் ஆசிரியர்கள் உறுதிமொழியெடுத்தனர்.



இதைத்தொடர்ந்து, கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையின் மாணவர்கள் கடந்த எட்டு வருடங்களாக தாங்களே வடிவமைத்த ஆடைகள் மற்றும் துண்டுகளை கோவை அரசு பொது மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு மற்றும் அதற்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கி புத்தாண்டை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதல்வர் ஏ.இரமேஷ், பாபா ஞானகுமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...