கோவையில் சாலையில் கிடந்த தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு..!

கிணத்துக்கடவு அருகே சாலையில் கீழே கிடந்து எடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பாபுவின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.


கோவை: கோவையில் சாலையில் கிடந்த தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவைகிணத்துக்கடவு அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் பாபு (47). இவர் கிணத்துக்கடவில் மேம்பாலத்தின்கீழே கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பழைய பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை இவர் ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தில் இருந்து கீழே ஒரு சிறிய டப்பா விழுந்தது.

இதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் பாபு டப்பாவை எடுத்து திறந்து பார்த்தார். அதில் தங்க நகைகள் இருந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் பாபு காவல் நிலையம் சென்று தங்க நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். கீழே கிடந்து எடுத்த நகையை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாபுவின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

இந்த நிலையில், சிறிது நேரத்தில் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி ரோட்டில் ஆயில் மில் பகுதியில் வசித்து வரும் கருப்புச்சாமி என்பவரது மனைவி காளீஸ்வரி (33). கிணத்துகடவு போலீஸ் நிலையம் வந்து தான் கிணத்துக்கடவு அடகுக் கடைக்குச் சென்று நகைகளை அடகு வைத்து விட்டு மீதி 3/4 பவுன் தங்க நகைகளை ஒரு டப்பாவில் வைத்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது அது எங்கோ தவறிவிட்டது என்றார்.

இதையடுத்து, போலீசார் ஆட்டோ ஓட்டுநர் பாபு ஒப்படைத்த டப்பாவை திறந்து பார்த்தபோது அது காளீஸ்வரியின் தங்க நகை என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, காளீஸ்வரி ஆட்டோ ஓட்டுநர் பாபுக்கும், போலீசாருக்கு நன்றி தெரிவித்து நகைகளை வாங்கிக்கொண்டு சென்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...