பல்லடம் அருகே உள்ள அருள் புரத்தைச் சேர்ந்த பிரவின் பிரபு (33) என்பவர் 15 வயது சிறுமியை வெளியூர் அழைத்துச் சென்று திருமணம் செய்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பல்லடம் அருகே உள்ள அருள் புரத்தைச் சேர்ந்தவர் பிரவின் பிரபு (33), இவர் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு இருவரும் திருமணம் செய்து வெளியூரில் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, பிரவின்பிரபு மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிரவின் பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.