வால்பாறை தெப்பக்குளம் மேடு பகுதியில் சார் ஆட்சியர் முன்னிலையில் நிலம் அளவீடு செய்து கல்லாறு பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டது!

தெப்பக்குளம் மேடு பகுதியில் 21 குடும்பங்களுக்கு அவர்கள் விரும்பிய படி தனி தனியாக 1.5 சென்ட் குடிசை அமைக்க இடம் அளந்து கொடுத்தனர்.


கோவை: வால்பாறை கல்லாறு குடிமக்கள் தெப்பக்குளம் மேடு பகுதியில் சார் ஆட்சியர் முன்னிலையில் நிலம் அளவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லாறு குடி தெப்பக்குளமேடு காடர் பழங்குடி மக்கள் 21 பேர்களுக்கு ஒரு நபருக்கு 1.5 செண்டு அளவில் பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது.



தெப்பக்குளம் மேடு என்ற இடத்தில் கல்லாறு பழங்குடி மக்கள் தங்களுக்கு தனி தனியாக குடிசைகள் அமைத்தனர். இதில் தெப்பக்குளம் மேடு பகுதியில் 21 பேர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு விட்டது ஆனால், நிலம் அளந்து கொடுக்கவில்லை என்று வனத்துறையினர் பழங்குடி மக்கள் அமைத்த குடிசைகளை அகற்றினர்.

இதனை தொடர்ந்து, கல்லாறு ஆதிவாசி பழங்குடி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் சென்று தங்களுக்கு 1.5 சென்ட் இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் எங்களுக்கு தனி தனியாக 21 பேர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்றும் நாங்கள் அமைத்த குடிசைகளை வனத்துறையினர் அகற்றிவிட்டனர் என்றும் இதற்கு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சரியான முறையில் இடம் அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு வழங்கினர்.

இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஞானம் தேவ் ராவ் தலைமையில் ஆனைமலை புலிகள் காப்பக திட்ட துணை இயக்குனர் எம்.ஜி.கணேசன், மாவட்ட பழங்குடி நல அலுவலர் ராம் குமார், மற்றும் நில அளவைத்துறை, வனத்துறை, வருவாய் துறையினர் இணைந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் கல்லாறு ஆதிவாசி பழங்குடி மக்கள் கிராமம் தெப்பக்குளம் மேடு பகுதிக்குச் சென்று 21 குடும்பங்களுக்கு அவர்கள் விரும்பிய படி தனி தனியாக 1.5 சென்ட் குடிசை அமைக்க இடம் அளந்து கொடுத்தனர்.



இதில் காலை 11 மணிக்கு துவங்கிய நில அளவை பணிகள் மாலை 4.30 மணி வரை காடர் பழங்குடி மக்களுடன் இணைந்து நேர்த்தியாக செய்தனர். மதியம் 2 மணி அளவில் அனைவருக்கும் வேக வைத்த வெத்தலை வள்ளி கிழங்கு மற்றும் மரவள்ளிக் கிழங்குடன், கிழங்கு சட்னியும், மதிய உணவும் வழங்கப்பட்டது.

கல்லாறு பழங்குடி மக்கள் தமிழக அரசுக்கும் இதை வழி நடத்திய மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் எம்.ஜி.கணேசன் மற்றும் உடன் நின்ற அனைத்து தோழமை சக்திகளுக்கும், கல்லாறுகுடி- தெப்பக்குளமேடு கிராமம், ஆனைமலைத்தொடர் வாழ் பழங்குடிகள் மற்றும் தமிழகப் பழங்குடிகளின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...