கோவை மாவட்டத்தில் நாளை 15வது மெகா கோவிட்‌ தடுப்பூசி முகாம்‌..!

கிராமப்புறங்களில்‌ 601 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில்‌ 249 முகாம்கள் என மொத்தம்‌ 850 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளை 15-வது மெகா கோவிட்‌ தடுப்பூசி முகாம்‌ நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்‌ கோவிட்‌-19 தடுப்பூசி செலுத்தும்‌ பணிகள்‌ சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோயமுத்தூர்‌ மாவட்டத்தில்‌ 18 வயதிற்கு மேற்பட்ட 26.11 லட்சம்‌ நபர்களுக்கு முதல்‌ தவணையும்‌, 19.34 லட்சம்‌ நபர்களுக்கு இரண்டாம்‌ தவணையும்‌ கோவிட்‌-18 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில்‌ 18 வயதிற்கு மேற்பட்ட 93.6 சதவீதம்‌ பேருக்கு முதல்‌ தவணை தடுப்பூசியும்‌ 68 சதவீதம்‌ பேருக்கு இரண்டாம்‌ தவணை தடுப்பூசிகளும்‌ செலுத்தப்பட்டுள்ளன. டிசம்பர்‌ மாதத்திற்குள்‌ 100 சதவீதம்‌ பேருக்கு தடுப்பூசி வழங்கிட திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின்‌ உத்தரவிற்கிணங்க, மெகா தடுப்பூசி முகாம்கள்‌ கோவை மாவட்டத்தில்‌ 12.09.2021 அன்று தொடங்கி இதுவரை 14 மெகா கோவிட்‌ தடுப்பூசி முகாம்கள்‌ நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்‌ 128 லட்சம்‌ பேருக்கு கோவிட்‌-19 தடுப்பூசிகள்‌ செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவையில் நாளை (18.12.2021) சனிக்கிழமை அன்று 15-வது மெகா கோவிட்‌ தடுப்பூசி முகாம்‌ நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில்‌ 601 முகாம்களும்‌ மாநகராட்சிப் பகுதிகளில்‌ 249 முகாம்கள்‌ மொத்தம்‌ 850 தடுப்பூசி மையங்கள்‌ நிறுவப்பட்டுள்ளன. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொது மக்கள்‌ அனைவரும்‌ இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இரண்டாம்‌ தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால்‌ மட்டுமே உருமாறி கொண்டிருக்கும்‌ வைரசுக்கு எதிரான நோய்‌ எதிர்ப்பாற்றல்‌ முழுமையாக உருவாகும்‌. தற்சமயம்‌ ஒமைக்ரான்‌ என்னும்‌ உருமாறிய கொரோனா பரவி வரும்‌ சூழலில்‌ வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள்‌ தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நோய்த்தொற்று பரவும்‌ அபாயம்‌ இருப்பதால்‌, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம்‌ 71(1)-ன்படி, சந்தைப்‌ பகுதிகள்‌, பேரங்காடிகள்‌, திரையரங்குகள்‌ மற்றும்‌ பிற பொழுதுபோக்கு இடங்கள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, விளையாட்டு திடல்கள்‌, உணவகங்கள்‌, ஆகிய இடங்களில்‌ அதனுடைய உரிமையாளர்கள்‌ வாடிக்கையாளர்களின்‌ இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க ஒன்றியங்கள்‌ தோறும்‌ கண்காணிப்பு அலுவலர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

எனவே, பொது மக்கள்‌ தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்படி முகாம்களில்‌ தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...