குன்னூர் சாலை பகுதியில் காட்டு எருமை நுழைந்ததால் போக்குவரத்து பாதிப்பு


குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் ஞாயிறன்று காலை ஒரு காட்டெருமை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், இதனால் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



புத்தாண்டு நாளான ஞாயிறன்று (நேற்று) காலை குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகம் பேர் கூடியிருந்தனர். அப்போது ஒரு காட்டெருமை அந்த சாலையில் திடீரென நுழைந்தது. இதனைக் கண்ட மக்கள் செய்வதறியாது நின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் காட்டெருமை சுற்றித்திறிய துவங்கியது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இதே காட்டெருமை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து, இதுபோன்ற காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைவதால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2016 அக்டோபர் மாதம் குன்னூர் சிம்ஸ் பார்க்கில் இருவரை காட்டெருமை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதுபோல் நிகழாமல்  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...