கோவையில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!

கோவை மத்திய மண்டலம் ராமநாதபுரம் 80 அடி சாலையை அடுத்த ஆறுமுக நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு.


கோவை: கோவையில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மத்திய மண்டலம் ராமநாதபுரம் 80 அடி சாலையை அடுத்த ஆறுமுக நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அங்கு தகர ஷெட் அமைத்து, பர்னிச்சர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து, நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை ஒரு வார காலத்திற்குள் காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பு செய்திருந்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.



ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்ததை தொடர்ந்து, நகரமைப்பு திட்ட அதிகாரி கருப்பாத்தாள் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை இன்று மீட்டனர்.



உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் ஜெயின் ராஜ், ராமநாதபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த பத்து வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த 4 சென்ட் இடத்தின் மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி ஆகும். விரைவில், மீட்கப்பட்ட இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும்.’’ என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...