கலந்தாய்வின் போது, பெ.நா.பாளையம் மற்றும் பிற இடங்களில், நடத்திய ஆய்வின் முடிவில் மனித கழிவுகளை மறுசுழற்சி செய்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கங்களை திரையிட்டனர்.
கோவை: மனித திடக் கழிவுகளை எவ்வாறு உரமாக மாற்றுவது என்பது குறித்து இன்று தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார ஆதரவு திட்டம் (TNUSSP) சார்பில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டத்தின் போது, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் இடங்களில், நடத்திய ஆய்வின் முடிவில் மனித கழிவுகளை மறுசுழற்சி செய்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கங்களை திரையிட்டனர்.

இதில், பங்கேற்ற கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகையில்: மனித திடக்கழிவுகளை எவ்வாறு உரங்களாக மாற்றுவது என்பது பற்றிய விரிவுரை காண்பதில் சிறிது ஆர்வமாகவே உள்ளது. பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்தான எண்ணங்கள் மாற்றமடைந்துள்ளன. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், சமூகப் பாதுகாப்பு, ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மீது பல்வேறு விதத்தில் நல்ல தாக்கத்தை உருவாக்கும், என்று தெரிவித்தார்.