கோவை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் - எஸ்.பி. வேலுமணி அறிக்கை

திமுக அரசை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.


கோவை: திமுகவை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக ஆர்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், திமுகவை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவினர், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும். மீண்டும், அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட வேண்டும்.

பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்க வேண்டும். அரசின் அலட்சியத்தால், கடுமையாக உயர்ந்து இருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் நலன் காக்கும் பல்வேறு பணிகளை செய்யத் தவறியதற்காக திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கோவை மாவட்ட மக்களின் அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் மாநகராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ஒதுக்கிய 500 -க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணிகளை ரத்து செய்வதற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...