கோவை மாவட்டத்தில் 1203 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, கோழிகளுக்கு திடீர் உயிரிழப்பு அல்லது பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.
கோவை: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால், கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் மற்றும் கறி கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கோழிகளுக்கு திடீர் உயிரிழப்பு ஏற்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளா மாநில எல்லையான வாளையார் சோதனை சாவடியில் இன்று பறவைக்காய்ச்சல் தடுப்புப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒமிக்ரான் மற்றும் பறவைக்காய்ச்சல் போன்ற தொற்றுக்கள் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தின் ஆனைகட்டி, வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செமனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு, உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறை, உள்ளாட்சி துறை ஆகிய துறைகள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் ஒரு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, கால்நடைகள், கால்நடை தீவனங்களை கொண்டு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 1203 கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த நிலையில், கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளில் அசாதாரண இறப்பு அல்லது பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களை அணுகி தகவல் அளிக்க வேண்டும்.
பறவைக்காய்ச்சல் நோய் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.