அரசு கட்டடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சேதமடைந்துள்ள கட்டடங்கள் ஏதேனும் உள்ளதா? என கண்டறியப்பட்டு அந்த கட்டடத்தை புதுபிக்க அல்லது புது கட்டடம் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 14 மற்றும் மாநகராட்சியில் 4 என சேர்த்து மொத்தம் 18 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு, இதன் கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில், 1.5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர்.

அங்கன்வாடி மையங்களில் அடிப்படைக் கல்வி, விளையாட்டு, சமச்சீரான உணவு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள் அங்கன்வாடிகளில் பராமரிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 177 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இதனிடையே, தனியார் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களை அரசின் சொந்த கட்டடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும், அரசு கட்டடத்தில் ஏற்கனவே இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சேதமடைந்துள்ள கட்டடங்கள் ஏதேனும் உள்ளதா? என கண்டறியப்பட்டு அந்த கட்டடத்தையும் புதுபிக்க அல்லது புது கட்டடம் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
"தனியார் கட்டடங்களில் இடநெருக்கடி உள்ளது. மேலும், வாடகையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அரசு கட்டடங்களில் உள்ள சில அங்கன்வாடி மையங்கள் பழைய கட்டடங்களில் இயங்கி வருகின்றன. தனியார் கட்டடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை அரசு கட்டடங்களுக்கு மாற்றவும், பழைய கட்டடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை புதுபித்து அல்லது புதிய கட்டடங்கள் கட்டவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்,’’ என்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.