முதற்கட்டமாக ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், மொத்தம் 32 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் முதற்கட்டமாக 12 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிலம் எடுப்பு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் எடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. விரைவில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கும், என வருவாய் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்ல, கோவை வழியாக செல்கின்றனர். இதேபோல், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், காய்கறிகள், பூக்கள் போன்றவை லாரிகள் மூலம் கோவை வழியாக தான் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் போன்ற ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேற்கு புறவழிச்சாலை திட்டம்
இதனால், ஊட்டிக்கு சுற்றுலா மற்றும் வர்த்தகம் செய்யும் அனைத்து வாகனங்கள் அனைத்தும் கோவை நகருக்குள் வந்து கோவை, குனியமுத்தூர் வழியாக பாலக்காடு சாலை வழியாக செல்வதால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், ஊரக பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி, இந்த சாலை கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரையில் இருந்து சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிகிறது.
மேற்கு புறவழிச்சாலை சாலை அமைப்பதற்காக, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் முதற்கட்டமாக ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மொத்தம் 32 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் முதற்கட்டமாக 12 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் எடுப்பு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மதுக்கரை, மாதம்பட்டி, பேரூர் - செட்டிபாளையம், தீத்திபாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இழப்பீடு தொகைகள் விரைவில் வழங்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படும்,’’ என்றார்.