யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வராமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பை இடித்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது.
வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சிங்கோனா எஸ்டேட் பகுதிகளில் தனித்தனியாகவும், கூட்டம் கூட்டமாக சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 7 காட்டு யானைகள் தேயிலைத் தொழிலாளர் குமார் என்பவரின் வீட்டு ஜன்னல், கதவுகளை உடைத்து உள்ளே இருந்த கட்டில், டிவி, சமையல் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவற்றை உடைத்து வீசியது.

வீட்டிலிருந்தவர்கள் பின்வாசல் வழியாக அருகிலிருந்த வீடுகளுக்குச் சென்று உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானைகள் நடமாட்டம் மிக அதிகமாக இருப்பதால் வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வராமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.