கோவையில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மேலும், சாதி ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சாதி ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வயது வந்தோர் தனது திருமணத்திற்கான இணையை தானே தேர்வு செய்து கொள்ள சட்டம் அனுமதி அளித்துள்ள போதிலும், அதை ஏற்காமல் சாதிய ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகின்றன.

சாதிய ஆணவக் கொலைகளை தடுக்க, சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். அதன் மூலமே, அத்தகைய கொலைகளை தடுக்கவும், அவ்வறான கொலைகள் நடைபெறும் போது உடனடியாக வழக்குப் பதிவு, துரிதமான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை வேகமாக முடித்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நீதி பெற முடியும்.

அதுபோலவே, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்.

மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் உடனடியாக பிணையில் வெளிவரும் சூழல் தமிழகத்தில் உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படும் போது விரைவாக விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.



கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இளைஞர்- இளம்பெண்களை குறி வைத்து இந்த விற்பனை உள்ளது. அதை உடனே தடுத்திட உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று காலை, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின் குமார் தலைமை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் M.விவேகானந்தன், S.பாரதி, V சந்திரசேகரன், அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...