கோவை சூலூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்கவுள்ளதற்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக வடக்கு மாவட்ட தலைவரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான சங்கீதா மனு அளித்தார்.


கோவை: கோவை சூலூர் தாலுக்கா கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்கவுள்ளதற்கு தடை விதிக்க கோரி பாஜக வடக்கு மாவட்ட தலைவர் மனு அளித்துள்ளார்.



கோவை சூலூர் தாலுக்கா சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபான சில்லறை விற்பனை கூடம் அமைய உள்ளதாகவும், அதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க வேண்டுமெனவும் பாஜக கோவை வடக்கு மாவட்ட தலைவரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சில்லறை விற்பனைக்கூடம் அமைய உள்ளதாக தெரிவதாகவும், இது குறித்து ஏற்கனவே காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு அமைய உள்ள மதுபான சில்லறை விற்பனை கூடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கூடம் அமைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுருந்த அவர் இது போன்ற மதுபான விற்பனை கூடத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும் எனவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...