கோவை பீளமேடு அருகே ரயில் மோதி வக்கீல் பரிதாபமாக பலி..!

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புது மாப்பிள்ளை ரயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் ரயில் மோதி வக்கீல் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு அடுத்த விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகன் திலீபன்(29). வக்கீலாக பணிபுரிந்து வந்த இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அவர் பத்திரிக்கை கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று காலை பீளமேடு அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரயில் தண்டவாளத்தை திலீபன் கடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் திலீபன் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி திலீபன் பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே இருப்புப் பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புது மாப்பிள்ளை ரயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...