கோவையில் சாலையை சுத்தம் செய்த போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்..!

சாலை முழுவதும் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை தூரத்தில் எடுத்து அப்புறப்படுத்திய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் பணியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


கோவை: கோவையில் சாலையை சுத்தம் செய்த போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜசேகருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை அவினாசி சாலை ஹோப் காலேஜ் நான்கு முனை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே நேற்று இரவு குடிநீர் குழாய் உடைப்பு தொடர்பாக சாலையில் குழி தோண்டப்பட்டு அப்படியே மூடி விட்டுச் சென்று விட்டனர். இதனால் இந்த நான்கு முனை சந்திப்பில் குழியிலிருந்து ஜல்லி கற்கள் சாலை முழுவதும் சிதறியது.

இந்நிலையில், இன்று காலை இந்த சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. காலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வந்த பீளமேடு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜசேகரன் சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் தடுமாறிச் செல்வதை பார்த்தார். மேலும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வேலைக்குச் செல்பவர்கள் இந்த ஜல்லி கற்களால் வாகனத்தை தடுமாறிக் கொண்டே ஓட்டி செல்வதை பார்த்தார்.

இதையடுத்து, உடனடியாக அருகில் இருந்த கடையில் விளக்கமாறையும் முறத்தையும் எடுத்து சாலை முழுவதும் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை தூரத்தில் எடுத்து அப்புறப்படுத்தினார்

இந்த நிலையில், போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் இந்த செயலை கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு பாராட்டியுள்ளார். இது போன்ற செயலில் ஈடுபடும் காவல்துறையினரை பொதுமக்கள் உதவி செய்ய முன் வருவதோடு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் பணியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...