ஆர்.எஸ்.புரம், மேற்கு மண்டல தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 23ம் தேதி, காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் வருகிற 23ம் தேதி அஞ்சல் குறைதீர்வு கூட்டம் நடைபெறுகிறது.
கோவை அஞ்சல் சேவை தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மூன்று மாதத்துக்கு ஒரு முறை குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும்.
மண்டல அளவில் நடத்தப்படும் இக்கூட்டம், ஆர்.எஸ்.புரம், மேற்கு மண்டல தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 23ம் தேதி நடக்கிறது. மேற்கு மண்டல தபால்துறை தலைவர் அறையில், அன்றைய தினம் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும்.
மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு கணக்கு, காப்பீடு போன்ற அஞ்சல் துறை தொடர்பான புகார்களை நுகர்வோர் நிவர்த்தி செய்துகொள்ளலாம். அஞ்சல் துறை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனையும் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.