அனைத்து ஏ.டி.எம். மையங்களில் தேவையான பணம் நிரப்பப்பட்டுள்ளதால் ஏடிஎம் சேவை பாதிக்காது என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர்: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருப்பூரில் வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவித்த மத்திய அரசு, இதற்காக வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் தயாராகி வருகிறது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தினை அறிவித்தது.
இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று பொதுத்துறை வங்கிகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
352 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இதில் பணியாற்றும் 3000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மேலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கிகளின் சேவை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நாள் ஒன்றுக்கு நடக்கும் ரூ. 1500 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏ.டி.எம். மையங்களில் தேவையான பணம் நிரப்பப்பட்டுள்ளதால் ஏடிஎம் சேவை பாதிக்காது என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருப்பூர் உஷா தியேட்டர் அருகே அமைந்துள்ள கனரா பேங்க் வங்கி அதிகாரிகள், பிரசாத், ரவிகுமார், சதீஷ் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.