வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று கிளை மானை வேட்டையாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்..!

வனப்பகுதிக்குள் தாவி வேகமாகச் சென்ற சிறுத்தை கிளை மானை வேட்டையாடி சாலையின் மறுபக்கத்தில் இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: கோவை வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று கிளை மானை வேட்டையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் சாலையோரம் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் புது தோட்டம் பகுதியில் இரவு நேரத்தில், வால்பாறையைச் சேர்ந்த ஒருவர் வனப்பகுதி அருகில் சாலையோரம் சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்து செல்போனில் படம் பிடித்துள்ளார்.

நீண்ட நேரமாக சிறுத்தை வனப்பகுதியை ஒட்டிய சாலையில் அமர்ந்து வனப்பகுதிக்குள் பார்த்துக் கொண்டிருந்தது.



திடீரென்று, சிறுத்தை வனப்பகுதிக்குள் தாவி வேகமாகச் சென்று வனப்பகுதிக்குள் நின்றிருந்த கிளை மானை வேட்டையாடி சாலையின் மறுபக்கத்தில் இழுத்துச் சென்றதை வாகனத்தில் இருந்து செல்போனில் படம் பிடித்து உள்ளார்.

இந்த நிகழ்வு தற்போது இணையதளத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...