தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள RSS பயிற்சி வகுப்பிற்கு மற்றும் மத பயிற்சிக்களுக்கு அனுமதி வழங்கும் கல்வி நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.
கோவை: கல்வி வளாகங்களுக்குள் மத சார்ந்த பயிற்சியை அளிக்க கூடாது எனவும் அவ்வாறு பயிற்சி அளிக்க உதவி புரியும் கல்வி நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் "கடந்த சில தினங்களாக கோவையில் மதவெறியை மாணவர்களிடையே உண்டாக்கும் விதமாக கல்வி வளாகங்களிலேயே பயிற்சி வகுப்புகளை RSS அமைப்புகள் செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர். இதற்கு, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் எவ்வாறு அனுமதியளிக்கிறது?" என்ற கேள்வியை எழுப்பி இருந்தனர்.
மேலும், தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள RSS பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க வேண்டும் எனவும் இது போன்ற மத பயிற்சிக்களுக்கு அனுமதி வழங்கும் கல்வி நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் மாணவர்களையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தை தங்கள் அமைப்பு முன்னெடுக்கும் என குறிப்பிட்டிருந்தனர்.